வாட்சப் "Delete for Me" - ஏற்பட்டுள்ள புதிய மற்றம்!


வாட்சப்பில் (WhatsApp) ஒரு செய்தியை தவறுதலாக "Delete for Me" செய்துவிட்டால், 5 செக்கன்களுக்குள் அதனை மீண்டும் "Undo" செய்துவிட முடியும். 

"Delete for Me" செய்யப்பட்ட ஒரு செய்தியை மீண்டும் பெற்றுக்கொள்ள வெறும் 5 செக்கன்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும். 5 செக்கன்களுக்குள் Undo செய்யாவிட்டால் குறித்த செய்தியை உங்களால் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது.

இந்த புதிய மாற்றம் "Delete for Me" செய்யப்பட்டவைக்கு மட்டுமே பொருந்தும். "Delete for Everyone" செய்யப்பட்டவற்றை இந்த முறை மூலம் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது.

இருப்பினும் WhatsApp இல் குறித்த ஒரு செய்தியை "Delete for Everyone" செய்யும் போது தவறுதலாக "Delete for Me" என்பதை பலரும் அழுத்திவிடுகின்றனர். இதனால் ஏற்படும் அசெளகரியத்தை தவிர்க்க இந்த புதிய மாற்றம் பெரிதும் உதவியாக அமையும் என பலரும் கருதுகின்றனர்.
Previous Post Next Post