அதீத நீர் மட்ட உயர்வு - அடுத்த நூற்றாண்டுக்குள் 6 மீட்டர் தரை வரை மூழ்கும் அபாயம்.

நாம் நினைப்பதை விட அதிவேகத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்துவருவதாக நாசா சமீபத்தில் அச்சம் தெரிவித்துள்ளது.

பூமியின் தரைப்பகுதியில் உருவாகும் வெப்பம் கடல், சமுத்திரங்களின் தரையை அடையும்போது அண்ணளவாக வெள்ளிக்கிரகத்தின் மேற்புற வெப்ப நிலைக்கு ஒப்பாக நிலைகொள்கிறதென அறியப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆண்டுகளில் மாத்திரம் கடல் நீர் மட்டம் 7 cm உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு உயர்வு வீதம் 1.9 mm ஆக உள்ளது.

இதே நிலையில் நீடித்தால் அடுத்த நூற்றாண்டு நடு பகுதியில் சுமார் 6.4 m வரை நீர்மட்டம் உயரும்.
தொழில் சாலைகளின் எண்ணிக்கை அதிக்கை அதிகரிப்பதனாலும் அவற்றின் புகைவெளியீடு மீது திட்டவட்ட நடவடிக்கைகள் இல்லாமையாலும் நீர் மட்ட உயர்வு இன்னும் அதீத வேகத்தில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கிறீன்லாந்து ,அண்டார்டிக்கா பகுதியின் பனிமலைகள் வெப்ப சரிவடைவதே நீர்மட்ட உயர்விற்கு காரணமாக உள்ளது.

அவ் முழு பனி மலைகளும் உருகுமாயின் புவியின் நீர்மட்டம் சுமார்  60 m வரை உயரும்.

அவ்வாறான ஒரு நிலையில் உலக வரைபடத்தில் இருந்து பல நாடுகள் இல்லாமல் போகும்.

நமது பூட்டக்குழந்தை வாழ்வதற்காக, உங்கள் வாகனங்களின் காபன் வெளியீட்டை சரிபார்த்துவிட்டீர்களா?
أحدث أقدم