இன்றைய உலகை உலுக்கும் பணையத் தீநிரல் (Ransomware) தாக்குதல் பற்றி அறிவீர்களா?


பணையத் தீநிரல் (Ransomware) என்பது தீநிரல்களில் ஒன்றாகும். இந்த நச்சுநிரலானது, முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு இரசியாவில் அதிகம் உணரப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் உணரப்படுகிறது. இது ஒரு கணினியின் கட்டகத்தை, தனது நிரல் வன்மையால், குறியீட்டுச்சொற்களாக, தகவல் மறைப்பு செய்து, பூட்டி விடுகிறது. பிறகு அதனைத் திறப்பதற்கு பணம் கொடுத்தால் தான், இத்தீநிரலாளர், பூட்டப்பட்ட அக்கணினியைத் திறப்பதற்குத் தேவையான
கடவுச்சொற்களைத் தருவார். இதன் திறனால் 2013 ஆம் ஆண்டு, 2,50, 000 கணினிகள் முடக்கப்பட்டன. மேலும், இது சென்றாண்டு 5, 00, 000 கணினிகளை முடக்கியதாக நம்பப்படுகிறது. இத்தீநிரலளை அனுப்பியவர்கள், 2013 ஆம் ஆண்டு, 30, 00, 000 அமெரிக்க டாலர் பெற்றதாக, பொது மக்களுக்கான ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

வான்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல் என்பது தற்போது நடந்துகொண்டிருக்கும் இணையத் தாக்குதல் ஆகும். இந்த பணையத் தீநிரல் கணினிப்புழுவின் இலக்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் கணினிகள் ஆகும். இதன் தாக்குதல் மே 12 2017, வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி, இதுவரை 150 நாடுகளில் 230,000 மேற்பட்ட கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஈடாக எண்மநாணயத்தை கேட்கின்றனர்.


நன்றி: தமிழ் விக்கிபீடியா
أحدث أقدم