இலங்கையில் இன்னும் ஓர் புதிய தமிழ் மொழி மூல பாடசாலை ஆரம்பம்..!

மதுகம பிரதேசத்தில் தமிழ் மொழி மூல பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related image

மதுகமவை அண்டிய பிரதேசங்களில் வாழும் தமிழ் மொழி மூல மாணவர்களின் நலன்கருதி, தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் மற்றும் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளை கவனத்திற் கொண்டு, கல்வி அமைச்சு மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மதுகம நகரை அண்டிய பிரதேசத்தில் தமிழ் மொழி மூல இரண்டாம் நிலை பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கும், அதற்காக நமுனுகல பெருந்தோட்ட கம்பனியின் மூலம் நிர்வகிக்கப்படுகின்ற மதுகம தோட்டத்தில் 05 ஏக்கர் காணிப்பகுதியினை ஒதுக்கிக் கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Source: dgi.gov.lk

Previous Post Next Post