நினைவுத் திறன் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் அற்புத பானங்கள்..!



நாம் உண்ணும் உணவில் கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் சரியான அளவில் இருந்தால், உடலுறுப்புக்கள் எவ்வித இடையூறுமின்றி நன்கு செயல்படும். ஒவ்வொருவருக்கும் நல்ல புத்திசாலியாக, எதிலும் வல்லவராக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

இதற்கு மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டுமானால், மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான கொழுப்புக்கள் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் மற்றும் ஆற்றலை வழங்கி, மூளைச் செல்கள் சிறப்பாக செயல்பட உதவும். இங்கு மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் அற்புத பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் எதையேனும் ஒன்றை தினமும் குடித்து வந்தால், மூளை சிறப்பாக செயல்படும்.

பானம் #1 

மிக்ஸியில் 1 கப் பால், வாழைப்பழம், 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார். இந்த பானத்தை குடித்தால், ஞாபக மறதி தடுக்கப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கும்.

பானம் #2 

ஒரு கப் பெர்ரி பழங்களை மிக்ஸியில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சில துண்டுகள் அன்னாசிப் பழம், 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகள் மற்றும் 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இந்த பானத்தைக் குடித்து வந்தால், மூளையினுள் உட்காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

பானம் #3 

மிக்ஸியில் ஒரு வாழைப்பழத்தைப் போட்டு, அதோடு 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகள், 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள், 1 கப் சோயா பால் மற்றும் 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பானம் சுவையாக இருப்பதோடு, மனதை ரிலாக்ஸாகவும், புத்துணர்ச்சியுடனும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும்.

பானம் #4 


மிக்ஸியில் 1 கப் மாதுளை ஜூஸ், 1/2 கப் ஸ்ட்ராபெர்ரி, 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 கப் தயிர் சேர்த்து நன்கு அரைத்து, அதைக் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூளையின் சக்தியை மேம்படுத்தும்

பானம் #5 

1 கப் பசலைக் கீரையுடன், 1 கப் மாம்பழம், 1 அவகேடோ பழம் மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்து, அதைக் குடித்து வந்தால், அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயைத் தடுக்கலாம்.

Previous Post Next Post