
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைய கடந்தாண்டில் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 4,500 மாணவர்களுக்கு உயர்தரத்தில் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திருந்து மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவிருப்பதாக கல்வியமைச்சு தொவித்துள்ளது.
இனங்காணப்பட்ட 43 பாடசாலைகளில் 26 தொழில்நுட்பம் சார்ந்த பாடநெறிகளை தொடர்வதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அனைத்து மாணவர்களுக்கும் தரம் 13 வரை கட்டாய கல்வியை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
Source: teachexam.blogspot.com