Blue Whale : 17 வயது சிறுமியான தற்கொலை அட்மின் கைது..!
ப்ளூவேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சிறுமிதான் உத்தரவுகளுக்கு கீழ்படியாவிட்டால் உறவினர்களையோ, அல்லது நெருக்கமானவர்களையோ கொன்று விடுவதாக ப்ளூவேல் விளையாட்டை விளையாடி வந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மாஸ்கோ அருகே 21 வயது இளைஞர் ஒருவரையும் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுமியும் ஆரம்பத்தில் ப்ளூவேல் விளையாடியவர்தான் என்றும், ஆனால் கடைசி கட்ட சவாலை தேர்ந்தெடுக்காமல், மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டும் அட்மினாக செயல்படும் பணியை தேர்ந்தெடுத்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Source : puthiyathalaimurai.com
No comments