மனசாட்சி - சிறுகதை..!


வழமைபோலவே சதீஷ் காரை வேகமாக ஓட்டினான்.

" என்னங்க பையன் இருக்கான்க இன்னிக்காவது வண்டிய மெதுவா ஓட்டக்கூடாதா?"
மனைவி மாயா கணவனை இன்றும் கடிந்துகொண்டாள்.

" எப்ப பாரு வண்டி ஓட்டும் போது  தொணதொணண்ணுகிட்டு.பேசாம வரப்போரியா இல்லையா..கொன்பரன்ஸ்க்கு டைமாச்சு.ஒன்டைம்கு நாம அங்க இருக்கவேண்டாமா?"

 மனைவியை அதட்டிய சதீஷ்..  வண்டியின் வேகத்தை துரிதப்படுத்தினா
ன்.சாலை சிக்னல்களும் கடந்தன.

" ஆமா ...என்னையை குறை சொல்லுங்க.. வீட்டுல இருந்தே சொன்னேன் கொஞ்சம் நேரகாலத்தோடு கிளம்புவோம் என்று...எப்ப நா சொன்ன பேச்சகேட்டிருக்கீங்க"

மறுபக்கம் திரும்பி பார்வையை சாலையில் செழுத்தினாள்மாயா.

 கண்ணாடியூடே காட்சிகளை ரசித்து நகைத்தவன்னம் ஆங்கில நேர்ஸரி ரைம்ஸ்களை வாய்விட்டு பாடிக்கொண்டே வந்தான் பாபு.
பாபு,மாயா சதீஷ் தம்பதிகளின் புத்திசாளிப்பையன்.
சதீஷ் வண்டியின் வேகத்தை குறைக்காமலே பாபுவைக்கேட்டான்.

" என்ன ரைம் பாபு நீ பாடுரே? நல்லா இருக்கே..டேடியும் கேக்கனுமில்ல சத்தமா பாடு "

" ரெட் லைட் ரெட் லைட் வட் டூ யூ ஸே...ஐ ஸே ..ஸ்டொப் ..ஸ்டொப் ரைட் எவே...யெலோ லைட்..."பாபு தன் குரலுயர்த்திப் பாட

" வாவ்...ரோட் சிக்னல் பத்தின இந்த ரைம் நல்லா இருக்கே.."

"ஆமாம் டேடி. நம்ம மிஸ்தான் இது சொல்லிகொடுத்தாங்க.." என்றான் பாபு.

" பாபு ...நாம எப்போதும் ரோட் சிக்னல்ஸ்ஸ மதிக்க கத்துக்கனும்...அதோட வண்டியின் வேகத்தையும் சீரா வெச்சிக்கனும்."

" மீறினா எக்ஸிடன்ஸ் எல்லாம் நடக்குமாமே...நெரய்யபேர் செத்துபோவாங்களா டேடி?"
ஆச்சர்யம் தொக்க கேட்டான் பாபு.

" ஆமான்டா கண்ணா..நடக்க  சான்ஸஸ் இருக்கு..என்ன அவசரமா இருந்தாலும் ரோட் ரூல்ஸ்ஸ மீறவே கூடாது..இந்த வயசுல இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கியே.. நீ  இப்பவே மனச்சாட்சியுள்ள ஆளாயிட்டடா வெல்டன் மை Bபோய்." சதீஷ் பையனை தட்டிக்கொடுத்தான்.

"டேடி மனச்சாட்சின்னா என்ன டேடி? அது என்கிட்ட மட்டுமா இருக்கு...அது உங்ககிட்ட இல்லையா டேடி?" என்றான் அப்பாவியாய்.

ஒன்றும் புரியாத கணவன் மனைவி இருவரும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்க..

" இல்ல டேடி ...இப்போ நாம டூ சிக்னல் க்ரொஸ் பண்ணிட்டோம் ..ஆனா நீங்க ஒன்னுல கூட ஸ்டொப் பண்ணலயே..ஸ்பீடா போரீங்களே  டேடீ ...அதான்" என்று வெகுளியாய் கூறிய  பாபு திரும்பவும்  'ரெட் லைட்....ரெட் லைட் ' முணுமுணத்தவாரு கண்ணாடி வெளியே பார்வைகளை செலுத்தி ரசிக்கத்தொடங்கினான்.

மாயா தன் சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டாள்.

வண்டியின் எக்ஸலரேட்டை அமத்தியிருந்த சதீஷின் கால் தன்னிச்சையாக  தளர..  முள் தைத்த வலியோடு...வண்டியை மெதுவாய் நகரவிட்டான்.

(யாவும் கற்பனை)

எழுதியவர்:

- F. Nihaza
Kahatowita-
Previous Post Next Post