முட்டைகள் உடையாமல் 1500 கிலோ எடையுடைய டைனோசரால் எப்படி அடைகாக்க முடிந்தது?


1500 கிலோ எடையையுடைய டைனோசர் தனது முட்டைகளை உடையாமல் எப்படி அடைகாத்திருக்கும்?

இது பற்றிய ஓர் சுவாரஸ்யமான ஓர் ஆய்வினை வட அமெரிக்க மற்றும் ஆசிய ஆய்வாளர்கள் குழு ஒன்று மேற்கொண்டிருந்தது.

டைனோசரின் குழந்தை வளர்ப்பு பண்பு குறித்து ஆய்வு செய்வது என்பது சுலபமான ஒன்றாக இருப்பதில்லை. ஏனெனில், அதன் படிமங்கள் என்பது ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவானதாக இருக்கிறது. ஆனால், ஒரு நீண்ட முயற்சி மட்டும் ஆய்வுக்குப் பின் ஒவிராப்டோரோசர் என்று அழைக்கப்படும் டைனோசரின் ஒரு வகையின் அடைகாக்கும் தன்மை கண்டறியபட்டுள்ளது.

இந்த டைனோசர்கள் நடுவில் கொஞ்சம் இடம் விட்டு வட்டமாக தங்களது முட்டைகளை கூட்டின் உள்ளே அடுக்கி வைத்து, அந்த வட்டத்தின் நடுவே அமரும்.



அந்த மைய வெளியானது டைனோசரின் எடையை தாங்கும். அதே நேரம், உடல் எடையினால் முட்டை உடையாமல், வெப்பமானது அந்த முட்டையினில்படும். இப்படியாக தனது முட்டைகளை டைனோசர் அடைகாத்து இருக்கிறது என்கிறது ஆய்வு.


எனினும், பெரும்பாலான டைனோசர்கள் நூறு கிலோ அல்லது அதற்கு குறைவான எடை உடையவை. பறவை போன்ற உடலும், குறிப்பாக கிளி போன்ற மண்டை ஓடும் உடையவையாகவே காணப்பட்டன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆதாரம் : பிபிசி தமிழ்


-
Previous Post Next Post