2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்


க.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

"பெறுபேற்று மீளாய்வின்போது குறித்த விடைத்தாள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பலரால் முழுமையாக பரிசீலிக்கப்படும். விடைத்தாள் மீளாய்வின் பெறுபேறாக Z புள்ளிகளில் அல்லது கிடைக்கப் பெற்றுள்ள தரங்களில் அதிகரித்தலோ அல்லது குறைதலோ ஏற்பட இடமுண்டு என்பதை பரீட்சார்த்திகள் அறிந்திருக்கவேண்டும் என்பதை வலியூறுத்துகின்றேன்."
-பரீட்சை ஆணையாளர் நாயகம்.

இவ்வறிவித்தலும் மாதிரி விண்ணப்பப்படிவமும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) பதிவேற்றப்பட்டுள்ளது.

பிழையான தகவல்களை உள்ளடக்கிய மீளாய்வூ விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.01.16

தரவிறக்கம் செய்ய (To Download):
Application - விண்ணப்பப் படிவம் 
Subject list  - பாட விபரம்

Source - www.doenets.lk

Previous Post Next Post