திறந்த போட்டிப் பரீட்சை - 2019 : நீதிமன்ற எழுதுநர் தரம் III (Court Clerk Grade III) | நீதிச் சேவை ஆணைக்குழு


பின்வரும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சைக்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2019)

Open Competitive Examination for the recruitment of officers to Grade III of Court Clerk of the Court Management Assistants’ Service in the Scheduled Public Officer’s Service - 2018 (2019)

இப்பதவி நிரந்தரமானது. ஓய்வூதியத்திற்குரியது. பகிரங்க சேவைக்குரிய உத்தியோகத்தர்களின் பதவிகள் ஓய்வூதியத்துடனானவை என மேலே குறிப்பிடப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் ஆட்சேர்த்துக் கொள்ளப்படும் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கு நியமனம் பெறும் உத்தியோகத்தர்களுக்குரிய ஓய்வூதிய முறைமையானது அரசாங்கத்தினால் மற்றும் / அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களால் நிர்ணயிக்கப்படும்.

சம்பள அளவு: 47,990/-

மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைவாக தயாரிக்கப்படாத விண்ணப்பப்படிவங்கள் மற்றும் முழுமையான தகவல்களைக் கொண்டிராத விண்ணப்பப்படிவங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும். (விண்ணப்பப்படிவத்தின் நிழற்பிரதியொன்றினை உங்கள் வசம் வைத்துக் கொள்ளவும்.) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் பரீட்சை அறிவித்தலில் உள்ள விண்ணப்பப்படிவத்திற்கு அமைவாக சகல தகவல்களையும் உள்ளடக்கி சரியான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதனையும் உரிய பரீட்சைக் கட்டணம் செலுத்தப்பட்டு, அதன் விபரங்கள் விண்ணப்பப்படிவத்தில் உள்ளடக்கப்பட்டு பற்றுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ளதா என்பதனையும் விண்ணப்பதாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அவ்வாறில்லை எனின் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பப்படிவங்கள் விண்ணப்பதாரி பரீட்சைக்கு தோற்ற விரும்பும் மொழி மூலமே தயாரிக்கப்படல் வேண்டும்.


விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 ஏப்ரல் 01

முழு விபரம்:








Source - அரச வர்த்தமானி (2019/03/01)

Previous Post Next Post