Lesson 03 | Parts of Speech - பேச்சின் கூறுகள்


எந்தவொரு மொழியினதும் அடிப்படை சொற்களே (Words). ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் சொற்களை வைத்தே அது எந்த மொழி என்று நாம் அறிந்துகொள்கிறோம்.  அதேபோல், சொற்களை வைத்தே ஒருவர் சொல்லும் விடயம் என்ன, அல்லது ஒரு வாக்கியத்தில் எழுதப்பட்டிருக்கும் விடயம் என்னவென்று சரியாக எம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே, எந்த ஒரு மொழிக்கும் மிகவும் அடிப்படையாக சொற்களே உள்ளன. ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் அவ்வாறான சொற்கள் (Words) / சொற்களின் வகைகள் பற்றியே Parts of Speech - பேச்சின் கூறுகள் எனப்படும் இப்பகுதியில் கற்கப்போகிறோம்.

ஏற்கனே ஓரளவு ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் உற்பட ஆரம்பத்தில் இருந்தே ஆங்கிலம் கற்க விரும்புகின்றவர்களும், இலகுவில் விளங்கிக்கொள்ளும் அளவிற்கு இலகு மொழிநடையில், சிறு பாடங்களாக சிறு கட்டுரை வடிவில் இங்கே விளக்கங்கள் தரப்படுகிறன.

சொற்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் உபயோகத்தை பொருத்து, ஆங்கிலத்தில் பயன்படும் சொற்கள் 9 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

அவை,

1. Nouns - பெயர்ச்சொற்கள்.
2. Verbs - வினைச்சொற்கள்.
3. Adjectives - பெயரெச்சங்கள் 
4. Adverbs - வினையெச்சங்கள்.
5. Pronouns - பிரதிப் பெயர்ச்சொற்கள் / சுட்டுப்பெயர்ச்சொற்கள் 
6. Prepositions - முன்னிடைச்சொற்கள்.
7. Conjunctions - இணைப்புச்சொற்கள்
8. Interjections - வியப்புச் சொற்கள் / வியப்பிடைச்சொற்கள்
9. Articles or Determiners - நிபந்தனை சொற்கள்.

எனப்படுகின்றன.

என்னடா இது! ஆரம்பத்துலே பெரிய list வருதேன்னு யோசிக்க வேண்டாம், Nouns, Verbs என அனைத்து பகுதிகளும் தனித்தனியே கற்பிக்கப்படும். நீங்கள் விளங்கிக்கொள்ளும் அளவிற்கு ஏற்ப ஒருநாளைக்கு ஒரு தலைப்பு/பகுதி அல்லது இரண்டு தலைப்பு/பகுதி என உங்கள் விருப்பம் போல கற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் இவை சிறு சிறு கட்டுரைகளாக தரப்படுகின்றன.

Parts of Speech - பேச்சின் கூறுகள் பற்றி விளக்கும் தொடரந்துவரும் பாடங்களை (Lessons) | Parts of Speech (இங்கே அழுத்துங்கள்) பகுதியில் பார்வையிடலாம்.

- All rights reserved by manavarulagam.net

Previous Post Next Post