Advanced Certificate in Science 2020 - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


உயர்தரத்தில் பெறுபேறுகளை பெறாத மாணவர்களுக்கும் தமது சாதாரண தர பெறுபேறுகளுடன் இலங்கை திறந்த பல்கலைக்கழகதின் கீழ்காணும்   கற்கைநெறியை தொடர்வதன் மூலம் விஞ்ஞானம் மற்றும்  பொறியியல் தொழில்நுட்பத் துறையில் பட்டதாரி கற்கைநெறிகளுக்குள் பிரவேசிக்க முடியும்.

இக்கற்கைநெறியை தொடர்வதற்கு உயர்தரத்தில் கற்றிருக்கவேண்டிய அவசியமும் கிடையாது. க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி கணிதம், விஞ்ஞானம் உற்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மட்டும் போதுமானது.

இக்கற்கைநெறியினை தொடர்வதன் மூலம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின்,

- இயற்கை விஞ்ஞான பீடம்.
(Faculty of Natural Science)

- பொறியியல் தொழில்நுட்ப பீடம்
(Faculty of Engineering Technology)

ஆகிய பீடங்களில் பட்டதாரி கற்கைநெறிகளில் இணைந்துகொள்ள முடியும்.

எதிர்காலத்தில், இக்கற்கைநெறிகளை பகுதிநேரம் அல்லது முழுநேரம் என நீங்கள் விரும்பியவாறு தொடர முடியும்.

கற்கைநெறி:

- Advanced Certificate in Science 2020

இக்கற்கைநெறியில் வழங்கப்படும் பாடங்கள்:

- உயிரியல்.
- கணிதம்.
- இரசாயனவியல்.
- பௌதீகவியல்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 21.01.2020

விபரம்:

Source - Daily News (2020.01.09)

மேலதிக விபரங்கள் தேவைப்படின்,  உங்களுக்கு அருகாமையில்  உள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்களில் பெற்றுக்கொள்ளுங்கள். 
Previous Post Next Post