ஆங்கிலத்தில் குழப்பமான வார்த்தைகள் - Confused Words in English | பகுதி 01


சிலவேளைகளில் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரே மாதிரியாக உச்சரிக்கும் அல்லது எழுதும் சில சொற்களை வைத்து பிழையாக எழுதிவிடுகிறீர்கள். இதற்கு காரணம் குறித்த இடத்தில் எந்த சொல் சரியாக அமைய வேண்டும் என்பது பற்றிய தெளிவின்மையாகும் மற்றும் ஒரே மாதிரியான இரண்டு அல்லது மூன்று சொற்கள் வரும் போது அவற்றின் தமிழ் அர்த்தங்கள் என்னவென்று தெரியாமையாகும்.

'Confused English' எனும் பகுதியில் அவ்வாறான விடயங்கள் பற்றி பார்க்கலாம்.

Lose மற்றும்  Loose - வித்தியாசம் என்ன?

---------

Lose

தமிழ் அர்த்தம்: இழத்தல் | தோல்வியடைதல் | தொலைந்துவிடுதல் அல்லது தொலைத்துவிடுதல் - போன்ற தமிழ் தமிழ் அர்த்தங்களை கூறலாம்.

உதாரணமாக:

Do not lose hope.
நம்பிக்கையை இழக்காதே.

Do not lose the match.
போட்டியில் தோல்வியடைந்துவிடாதே.

I lost my watch.
நான் எனது கைக்கடிகாரத்தை தொலைத்துவிட்டேன்.

(Lost என்பது Lose என்பதின் இறந்தகாலம்)

---------

Loose

தமிழ் அர்த்தம்: தளர்ந்த | இறுக்கமற்ற - என்று அர்த்தமாகும்.

உதாரணமாக:

Loose clothes.
இறுக்கமற்ற ஆடைகள்.

Loose handle.
இறுக்கமற்ற கைப்பிடி.

---------

இப்போது உங்களால் Lose மற்றும்  Loose  ஆகிய சொற்களுக்கு இடையேயான வேறுபாடுகளை இலகுவாக விளங்கிக்கொள்ள முடிகிறது என நம்புகிறோம். மேலும் இதுபோன்ற மற்றுமொரு பதிவில் பார்க்கலாம்.
Previous Post Next Post