மார்ச் 31 வரை வாகன வருமான உத்தரவுப் பத்திரம் (VEHICLE REVENUE LICENCE) வழங்கல் தற்காலிகமாக நிறுத்தம் !


வாகன வருமான உத்தரவுப் பத்திரம் (VEHICLE REVENUE LICENCE) வழங்குவதை மார்ச் 31 வரை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய குறித்த காலப்பகுதிக்கான நிலுவையையும் தண்டப்பணத்தையும் அறவிடப்படப்போவதில்லை என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மார்ச் 16 தொடக்கம் ஏப்ரல் 15 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பாத்திரங்களின் கால எல்லையை ஜூன் 30 வரை நீடிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுபற்றிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
أحدث أقدم