News Confirmed - சகல அரச பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 20 வரை விடுமுறை!


கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக இலங்கையிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் ஏப்ரல் 20 வரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தகவல் கல்வி அமைச்சினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கன ஏப்ரல் விடுமுறை நாளை (13) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போது இசுறுபாயவில் நடைபெறும் விஷேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கல்வி அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதேவேளை, மீண்டும் ஏப்ரல் மாதம் 20 திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தேசிய பொறுப்பாக கருதி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதியும் நாட்டு மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
أحدث أقدم