நாளை முதல் சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை!


கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கையிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் தற்காலிகமாக சில நாட்களுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பான விஷேட அறிவித்தல் இன்று பிற்பகல் அளவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி பாடசாலைகள் அனைத்திற்கும் ஒரு வாரகாலம் அல்லது இரு வாரகாலம் விஷேட விடுமுறை வழங்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

News Confirmed - சகல அரச பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 20 வரை விடுமுறை!

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக அரச பாடசாலைகளின் கல்விச் சுற்றுலாக்கள் அனைத்தையும் இடைநிறுத்த கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
أحدث أقدم