Collective Nouns
கூட்டுப் பெயர்ச்சொற்கள்
உதாரணம்:
Team - அணி
Police - போலீஸ்
Army - ராணுவம்
Association - கழகம்
Gang - கும்பல்
அதிகளவான கூட்டுப் பெயர்ச்சொற்கள் பொதுவான பெயர்ச்சொற்கள் (Common Nouns) ஆக இருந்தபோதிலும், ஒரு நிறுவனம் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவை (சங்கம், கழகம், இயக்கம்) குறிக்கும் போது அவை உரித்தான பெயர்ச்சொற்களாகவும் (Proper Nouns) இருக்கலாம்.
உதாரணமாக,
United Nations (ஐக்கிய நாடுகள் சபை)
Microsoft (மைக்ரோசாப்ட் நிறுவனத்தை குறிக்கும்)
BBC (பிபிசி நிறுவனம்)
IIT (IIT நிறுவனம்)
CBI
Collective Nouns (கூட்டுப் பெயர்ச்சொற்கள்) ஒரு வாக்கியத்தில் இடம்பெறும் சந்தர்ப்பத்தை பொருத்து அவை ஒருமையாகவும், பன்மையாகவும் கருதப்படலாம். இது பற்றி தொடர்ந்து வரும் பாடங்களில் பார்க்கலாம்.