Nouns - பெயர்ச்சொற்கள்
நாம் ஐம்புலன்களால் உணரும் அனைத்திற்கும் ஒரு பெயர் உண்டு. அது மனிதனாக இருக்கலாம், மிருகம் அல்லது பறவையாக இருக்கலாம் அல்லது ஒரு உயிரற்ற ஒரு பொருளாக இருக்கலாம், ஏன் கண்களுக்கு புலப்படாத உணர்வாகவும் இருக்கலாம். அனைத்திற்கும் ஒரு பெயர் உண்டு.
ஆகவே எந்த ஒரு விடயத்திற்கும் பெயர் மிகவும் முக்கியமானதாகும். பெயர் இல்லாமல் ஒரு விடயத்தை குறிப்பிட முடியாது.
பெயர்ச்சொற்களை (Nouns) இலகுவாக விளங்கிக்கொள்ள, ஆங்கிலத்தில் இவற்றை சில பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
அவை:
பொதுவான பெயர்ச்சொற்கள்
Proper Nouns
உரித்தான பெயர்ச்சொற்கள்
Countable Nouns
கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள்
Uncountable Nouns
கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள்
Collective Nouns
கூட்டுப் பெயர்ச்சொற்கள்
Concrete Nouns
திடப் பெயர்ச்சொற்கள்
Abstract Nouns
நுண் பெயர்ச்சொற்கள்
Compound Nouns
கலவைப் பெயர்ச்சொற்கள்
எனப்படுகின்றன.
இவை ஒவ்வொன்றையும் Nouns - பெயர்ச்சொற்கள் எனும் பகுதியில் தனித்தனியே பார்க்கலாம்.
தொடர்பான பகுதி - Parts of Speech - பேச்சின் கூறுகள்
-----------
(ஏற்கனே ஓரளவு ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் உற்பட ஆரம்பத்தில் இருந்தே ஆங்கிலம் கற்க விரும்புகின்றவர்களும், இலகுவில் விளங்கிக்கொள்ளும் அளவிற்கு இலகு மொழிநடையில், சிறு பாடங்களாக, சிறு கட்டுரை வடிவில் இங்கே விளக்கங்கள் தரப்படுகின்றன).