மூளையின் 80% இல்லாமல் 5 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தை இயற்கை எய்தியது!


அமெரிக்காவில் புளோரிடாவில் மூளையின் 80% இல்லாமல் பிறந்த ஜாக்சன் ஸ்ட்ரோங் எனப்படும் குழந்தை ஒரு வருடம் கூட உயிர் வாழ்வது சிரமம் என வைத்தியர்கள் கூறியிருந்தும், மருத்துவ உலகத்திற்கே சவால்விடும் வகையில் 5 ஆண்டுகள் வரை வாழ்ந்து காட்டியுள்ளது. 

இக்குழந்தை கடந்த ஏப்ரல் மதம் 1 திகதி தனது தந்தையின் கைகளில் இருந்தவாறே இயற்கையாக மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூளையின் பெரும் பகுதி இல்லாமல் பிறந்து வாழ்ந்து காட்டிய இக்குழந்தையின் வாழ்கை பல்வேறுபட்ட நோய்களுடனும், சவால்களுடனும் வாழும் பலருக்கும் தன்னம்பிக்கை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post