5 Interesting English Phrases | ஆங்கிலத்தில் உரையாட 5 புதிய ஆங்கில சொற்றொடர்கள்


தினசரி ஆங்கிலத்தில் உரையாடும் போது பயன்படுத்தக்க்கூடிய 5 புதிய சொற்றொடர்களை பற்றி இங்கே பார்க்கலாம். 

1. Hit me up

Hit me up எனும் இந்த சொற்றொடர் ஆங்கிலத்தில் அதன் நேரடியான அர்த்தத்தை தருவதில்லை. 

உங்கள் நண்பர் அல்லது உறவினர் ஒருவர் தனியாக பிரயாணம் செய்யும் போது அவர் குறித்த இடத்தை சென்றடைந்ததும், அதை உறுதி செய்ய உங்களுக்கு ஒரு குறுந்தகவல் (message) அனுப்ப கோருவதை தெரிவிக்க இந்த சொற்றொடரை பயன்படுத்தலாம்.

உதாரணம்:

Hit me up when you reached home.
(வீட்டை சென்றடைந்ததும் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்)

2. It's on me

It's on me (It is on me) எனும் இந்த சொற்றொடரை நீங்கள் பின்வருவது போன்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, நீங்கள் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அதற்காக பணம் செலுத்துவதற்கான ரஷிது (bill) கிடைக்கும் போது அதை மற்றவர்களுக்கு செலுத்த விடாமல், நீங்கள் அதை பொறுப்பேற்கும் போது இந்த It's on me எனும் சொற்றொடரை உபயோகப்படுத்தலாம்.

தினசரி ஆங்கிலத்தில் உரையாடும் போது மேலே கூறியது போன்ற சந்தர்ப்பங்களில் It's on me எனும் சொற்றொடரை நீங்கள் பயன்படுத்தலாம்.

3. Break a leg

தினசரி ஆங்கிலத்தில் உரையாடும் போது ஒருவரை வாழ்த்த Good luck என குறிப்பிடுவதற்கு பதிலாக Break a leg எனும் இந்த சொற்றொடரை நீங்கள் பயன்படுத்தலாம்.

உதாரணமாக Break a leg! Kill the exam என்பது Good luck for your exam என்பதற்கு ஒத்த அர்த்தத்தை தரும்.

4. Not in my books

ஒருவர் பரிந்துரைக்கும் ஒரு விடயத்துக்கு மறுப்பு தெரிவிப்பதற்கு நீங்கள் இந்த சொற்றொடரை உபயோகிக்கலாம். எனினும் இது மிகவும் கோபமாகவோ அல்லது கடும் வெறுப்புடனோ இன்றி மிகவும் சாதுவான முறையில் உங்கள் மறுப்பை தெரிவிக்க உபயோகப்படுத்தக் கூடிய சொற்றொடராகும்.

உதாரணமாக நீங்கள் ஆழ்ந்த கவலையில் இருக்கும் போது, கவலையை மறப்பதற்காக உங்கள் நண்பர் ஒருவர் உங்களை மதுபானம் அருந்த அழைக்கும் போது, அதற்கு மறுப்பு தெரிவிக்க Not in my books எனும் இந்த சொற்றொடரை நீங்கள் உபயோகப்படுத்தலாம்.

Eg: I am sorry! It's not my books. I can't do that.
(மன்னிக்கவும், என்னால் அதை செய்ய முடியாது)

5. Okay by me

Okay by me என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ள Not in my books என்பதற்கு எதிர் கருத்தினை தரும். ஒருவர் கூறும் அல்லது பரிந்துரைக்கும் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்ள அல்லது சம்மதம் தெரிவிக்க நீங்கள் இந்த Okay by me எனும் சொற்றொடரை உபயோகிக்கலாம்.

உதாரணமாக, நீங்கள் ஒருவரை சந்திக்க செல்லும் போது, சிறிது தூரத்தை நடந்து செல்லவேண்டி வரும் என அவர் குறிப்பிடும் போது அதற்கு சம்மதம் தெரிவிக்க It's okay by me என நீங்கள் கூறலாம்.


அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் போது மேலே தரப்பட்டுள்ள 5 ஆங்கில சொற்றொடர்களும் உங்கள் உரையாடலை மேலும் மெருகூட்ட பயன்படும் என நாம் நம்புகிறோம். உங்கள் நண்பர்களுடனும் இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.
Previous Post Next Post