ஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 20


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Anyone can do this.
யார் வேண்டுமானாலும் இதை செய்ய முடியும்.

I can eat anything.
என்னால் எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியும்.

Come anytime.
எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்.

You can go anywhere.
நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

Don't believe him anymore.
இனிமேலும் அவனை நம்ப வேண்டாம்.

Gather around me.
என்னை சுற்றி ஒன்றுகூடுங்கள்.

Come afternoon.
பின்னேரம் வாருங்கள்.

Below the table.
மேசைக்கு கீழே.

Lifetime imprisonment. 
வாழ்நாள் சிறைத் தண்டனை (ஆயுள் தண்டனை).

Water tank is overflowing.
நீர் தொட்டி நிரம்பி வழிகிறது.
Previous Post Next Post