Killer Whales எனும் கொலைகாரத் திமிங்கலங்கள்!


கடலின் உணவுச் சங்கிலியில் மிகவும் உயர்ந்த இடத்தை பிடித்துள்ள Killer Whales அல்லது Orca Whales (ஓர்க்கா திமிங்கலங்கள்) என்றழைக்கப்டும் இந்த கொலைகாரத் திமிங்கலங்கள் ஆல்பா வேட்டைக்காரர்கள் (Alpha Predators) எனப்படுகின்றன. காரணம் இவை வேட்டையாடுகின்றன எனினும் வேறு கடல் உயிரினங்களால் இவற்றை வேட்டையாட முடியாது. அந்த அளவிற்கு இவற்றுக்கு வேகமும் திறமையும் உண்டு. 

ஓங்கில் (டால்பின்) இனங்களில் மிகவும் பெரிய அளவுடைய இவை கடற்பாலூட்டிகளாகும். மிகவும் வீரியமான மற்றும் கூர்மையான பற்களைக் கொண்டுள்ள இவை உலகின் அணைத்து கடற் பகுதிகளிலும் வாழக்கூடியவை. இந்த வகை ஓர்க்கா கொலைகாரத் திமிங்கலங்கள் 30 வருடங்களுக்கும் மேல் உயிர்வாழக்கூடியவை.

மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும் ஆற்றல் கொண்ட இவை 25 முதல் 30 அடி வரை நீளத்திற்கு வளரும். 

ஆண், பெண் குட்டிகளுடன் குழுக்களாக நீந்தித் திரியும் இவற்றின் குழுவில் எப்போதும் 3 முதல் 4 ஆண் திமிங்கிலங்கள் இருக்குமாம்.

கடல் சிங்கங்கள், சீல்கள், ஏனைய மீன்கள் மற்றும் ஏனைய வகை திமிங்கலங்கள் இவற்றின் பிரதான உணவாகும். ஒலி எதிரொலி முறையை பயன்படுத்தி இவை வேட்டையாடுகின்றன. இவை எழுப்பும் ஒலியின் எதிரொலியை வைத்து இரையின் உருவத்தையும் இரை இருக்கும் தூரத்தையும் கணித்துக்கொண்டு வேட்டைக்குப் புறப்படுகின்றனவாம். இவை சில வேளைகளில் இரையை கடற்கரை வரை துரத்திச் சென்று வேட்டையாடுமாம்.
أحدث أقدم