முளையூட்டிகளின் அழிவுக்கு மனித இனமே காரணம் - புதிய ஆய்வு


கடந்த 126,000 வருடங்களாக உலகில் இடம்பெற்ற 96% முலையூட்டி இனங்களில் அழிவுக்கு மனிதனே காரணம் என புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இதற்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றங்கள் கருதப்பட்ட போதிலும் புதிய ஆய்வின் படி அது பிழை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனிதன் சுமார் 65,000 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா கண்டத்திலும் 24,000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க கண்டங்களிலும் காலடி எடுத்து வைத்ததில் இருந்தே இவ்வாறு உயிரினங்களில் அழிவு பல மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Science Advances எனும் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஆய்வறிக்கையின் படி, மடகாஸ்கர் மற்றும் கரீபியன் தீவுகளிலும் மனிதனின் வருகைக்குப் பின்னர் முலையூட்டி இனங்களில் அழிவு உச்சத்தை தொட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இதன் உச்சகட்டமாக அடுத்துவரும் 100 ஆண்டு காலப்பகுதியில் மேலும் 558 இனங்கள் அழிந்து போகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிகழுமாயின், டைனோசர் இனத்தின் அழிவுக்குப் பின்னர் பூமியில் நிகழும் மிகப்பெரிய உயிரின அழிவு இதுவாகும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடந்த 1,500 வருடங்களில் மட்டும் 80 முலையூட்டி இனங்கள் பூமியில் இருந்து அழிந்து சென்றுள்ளன. இது 126,000 வருடங்களுக்கு முன்னர் முலையூட்டி இனங்களில் நிகந்த அழிவை விட1,700 மடங்கு அதிகரிப்பாக கருதப்படுகிறது.
أحدث أقدم