ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 22


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கில வாக்கியங்கள் / சொற்றொடர்கள் (பகுதி 01)

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.Can I see your passport, please?
தயவுசெய்து என்னால் உங்கள் கடவுச்சீட்டை பார்வையிட முடியுமா?

Do you have any luggage?
உங்களிடம் எதாவது பயணப் பொதிகள் உள்ளனவா?

How many pieces of luggage do you have?
உங்களிடம் எத்தனை பயணப் பொதிகள் உள்ளன?

Please do not leave any bags unattended.
பயணப் பொதிகளை கவனிப்போர் இன்றி விட்டுச்செல்ல வேண்டாம்.

Flight US 302 is now boarding.
US 302 விமானம் தற்போது பயணிகளை ஏற்றிகொண்டுள்ளது.

This is the final call for flight US 302  to London.
இது US 302 விமானத்தில் லண்டன் பயணிக்க இருப்பவர்களுக்கான இறுதி அழைப்பு.

Please proceed to gate number 4.
தயவுசெய்து வாயில் இலக்கம் 4 இற்கு செல்லுங்கள். 

Flight US 302 has been delayed.
US 302 விமானம் புறப்பட தாமதமாகிறது.

Have you ever been to United Kingdom before?
நீங்கள் இதற்கு முன்னர் ஐக்கிய இராச்சியம் வந்துள்ளீர்களா?

What is the purpose of your visit?
உங்கள் விஜயத்தின் நோக்கம் என்ன?

How long are you planning to stay?
நீங்கள் எவ்வளவு காலம் இங்கே தங்கியிருப்பீர்கள்?
Previous Post Next Post