ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 28


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே அவ்வாறன 24 வாக்கியங்களை தந்துள்ளோம். இந்த வாக்கியங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் Simple Tense வடிவத்தில் உள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


He runs fast.
அவன் வேகமாக ஓடுகிறான்.
Does he run fast?
அவன் வேகமாக ஓடுகிறானா?
He doesn't run fast.
அவன் வேகமாக ஓடுவதில்லை.
Doesn't he run fast?
அவன் வேகமாக ஓடுவதில்லையா?

She walked in the road.
அவள் பாதையில் நடந்தாள்.
Did she walk in the road?
அவள் பாதையில் நடந்தாளா?
She didn't walk in the road.
அவள் பாதையில் நடக்கவில்லை.
Didn't she walk in the road?
அவள் பாதையில் நடக்கவில்லையா?

They pull the rope.
அவர்கள் கயிற்றை இழுக்கின்றனர்.
Do they pull the rope?
அவர்கள் கயிற்றை இழுக்கின்றனரா?
They don't pull the rope.
அவர்கள் கயிற்றை இழுப்பதில்லை.
Don't they pull the rope?
அவர்கள் கயிற்றை இழுப்பதில்லையா?You accepted her gift.
நீங்கள் அவளுடைய பரிசை ஏற்றுக்கொண்டீர்கள்.
Did you accept her gift?
நீங்கள் அவளுடைய பரிசை ஏற்றுக்கொண்டீர்களா?
You didn't accept her gift.
நீங்கள் அவளுடைய பரிசை ஏற்றுக்கொள்ளவில்லை.
Didn't you accept her gift?
நீங்கள் அவளுடைய பரிசை ஏற்றுக்கொள்ளவில்லையா?

I will write an essay.
நான் ஒரு கட்டுரை எழுதுவேன்.
Will I write an essay?
நான் ஒரு கட்டுரை எழுதுவேனா?
I won't write an essay.
நான் ஒரு கட்டுரை எழுத மாட்டேன்.
Won't I write an essay?
நான் ஒரு கட்டுரை எழுத மாட்டேனா?

My mother cleans the house.
எனது தாய் வீட்டை சுத்தம் செய்கிறார்.
Does my mother clean the house?
எனது தாய் வீட்டை சுத்தம் செய்கிறாரா?
My mother doesn't clean the house.
எனது தாய் வீட்டை சுத்தம் செய்வதில்லை.
Doesn't my mother clean the house?
எனது தாய் வீட்டை சுத்தம் செய்வதில்லையா?
Previous Post Next Post