ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 31


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே அவ்வாறான 20 வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


He gave me money.
அவன் எனக்கு பணம் கொடுத்தான்.
Did he give me money?
அவன் எனக்கு பணம் கொடுத்தானா?
He didn't give me money.
அவன் எனக்கு பணம் கொடுக்கவில்லை.
Didn't he give me money?
அவன் எனக்கு பணம் கொடுக்கவில்லையா?

You are drinking tea.
நீங்கள் தேநீர் அருந்திக்கொண்டு இருக்கிறீர்கள்.
Are you drinking tea?
நீங்கள் தேநீர் அருந்திக்கொண்டு இருக்கிறீர்களா?
You are not drinking tea.
நீங்கள் தேநீர் அருந்திக்கொண்டு இருப்பதில்லை.
Aren't you drinking tea?
நீங்கள் தேநீர் அருந்திக்கொண்டு இருப்பதில்லையா?

They travel in a car.
அவர்கள் கார் ஒன்றில் பயணிக்கின்றனர். 
Do they travel in a car?
அவர்கள் கார் ஒன்றில் பயணிக்கின்றனரா?
They don't travel in a car.
அவர்கள் கார் ஒன்றில் பயணிப்பதில்லை.
Don't they travel in a car?
அவர்கள் கார் ஒன்றில் பயணிப்பதில்லையா?He is a very kind person.
அவர் மிகவும் கனிவான ஒருவர்.
Is he a very kind person?
அவர் மிகவும் கனிவான ஒருவரா?
He is not a very kind person.
அவர் மிகவும் கனிவான ஒருவரல்ல.
Isn't he a very kind person?
அவர் மிகவும் கனிவான ஒருவரல்லவா?

You can use this.
நீங்கள் இதை பயன்படுத்த முடியும்.
Can you use this?
நீங்கள் இதை பயன்படுத்த முடியுமா?
You can't use this.
நீங்கள் இதைப் பயன்படுத்த முடியாது.
Can't you use this?
நீங்கள் இதை பயன்படுத்த முடியாதா?
Previous Post Next Post