ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 35 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே அவ்வாறான 28 வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ள முடியும்.


He works hard.
அவன் கடினமாக உழைக்கிறான்.
Does he work hard?
அவன் கடினமாக உழைக்கிறானா?
He doesn't work hard.
அவன் கடினமாக உழைப்பதில்லை.
Doesn't he work hard?
அவன் கடினமாக உழைப்பதில்லையா?

You can take this.
இதை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.
Can you take this?
இதை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியுமா?
You can't take this.
இதை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியாது.
Can't you take this?
இதை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியாதா?

She has enough time.
அவளிடம் போதுமான நேரம் உள்ளது.
Does she have enough time.
அவளிடம் போதுமான நேரம் உள்ளதா?
She doesn't have enough time.
அவளிடம் போதுமான நேரம் இல்லை.
Doesn't she have enough time?
அவளிடம் போதுமான நேரம் இல்லையா?


This is an important document.
இது ஒரு முக்கிய ஆவணம்.
Is this an important document?
இது ஒரு முக்கிய ஆவணமா?
This is not an important document.
இது ஒரு முக்கிய ஆவணமல்ல.
Isn't this an important document?
இது ஒரு முக்கிய ஆவணமல்லவா?

It is my duty.
அது என்னுடைய கடமை.
Is it my duty?
அது என்னுடைய கடமையா?
It is not my duty.
அது என்னுடைய கடமை அல்ல.
Isn't it my duty?
அது என்னுடைய கடமை அல்லவா?

You are responsible for that.
அதற்கு நீங்கள் பொறுப்பு.
Are you responsible for that?
அதற்கு நீங்கள் பொறுப்பா?
You are not responsible for that.
அதற்கு நீங்கள் பொறுப்பல்ல.
Aren't you responsible for that?
அதற்கு நீங்கள் பொறுப்பல்லவா?Canada is a North American country.
கனடா ஒரு வட அமெரிக்க நாடு.
Is Canada a North American country?
கனடா ஒரு வட அமெரிக்க நாடா?
Canada is not a South American country.
கனடா ஒரு தென் அமெரிக்க நாடு அல்ல.
Isn't Canada a North American country?
கனடா ஒரு வட அமெரிக்க நாடு அல்லவா?
Previous Post Next Post