ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 38 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


Don't waste your time.
உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

Don't argue with fools.
முட்டாள்களுடன் விவாதிக்க வேண்டாம்.

Don't tell lies.
பொய் பேச வேண்டாம்.

Don't give up.
விட்டுவிட வேண்டாம்.

Don't worry about that.
அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

Don't be afraid.
பயப்பட வேண்டாம்.

Don't make me laugh.
என்னை சிரிக்கவைக்க வேண்டாம்.Don't break the rules.
விதிகளை மீற வேண்டாம்.

Don't be sad.
கவலையாக இருக்க வேண்டாம்.

Don't change the rules.
விதிகளை மாற்ற வேண்டாம்.

Don't be angry.
கோபப்பட வேண்டாம்.

Don't hurt my feelings.
என் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம்.

Don't be emotional.
உணர்ச்சிவசப்பட வேண்டாம்.

Don't let him go.
அவனைப் போக விட வேண்டாம்.
Previous Post Next Post