ஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

உங்கள் உணர்ச்சிகளை அல்லது உணர்வுகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த உதவும் சில சொற்கள் மற்றும் அவற்றால் உருவாக்க முடியுமான வாக்கியங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

சந்தோசம், மகிழ்ச்சி, கவலை, துக்கம், சோகம், கோபம் போன்ற மனித உணர்வுகள் எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை. ஆகவே ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடைவார்கள் மனித உணர்வுகளுடன் தொடர்புடைய ஆங்கில சொற்களை தெரிந்து வைத்திருத்தல் மிக முக்கியமானதாகும். 

உங்களுக்குள் உருவாகும் உணர்வுகளை ஆங்கிலத்தில் அந்த உணர்வுக்கு மட்டும் உரித்தான ஒரு சொல்லை மட்டும் உபயோகித்து வெளிப்படுத்த முடியாது. நீங்கள் கூறும் விடயத்தை பொருத்தும், சந்தர்ப்பத்தை பொருத்தும் அது மாறுபடும்.

சரி, வாருங்கள் அவ்வாறான சொற்களைப் பற்றிப் பார்க்கலாம்.

Happiness - சந்தோசம்

Glad
I am glad to see you.
உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.

Delighted
I am very delighted with your treat.
உங்கள் விருந்தில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

Cheerful
It's a cheerful day.
இது ஒரு மகிழ்ச்சியான நாள்

Thrilled
I was thrilled to see you.
உங்களை பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.


Sadness - கவலை

Miserable
Her childhood was so miserable.
அவளுடைய குழந்தைப் பருவம் துயரம் மிகுந்ததாக இருந்தது.

Upset
I lost my best friend and I am upset.
நான் எனது நெருங்கிய நண்பனை இழந்துவிட்டேன், இப்போது அதற்காக வருந்துகிறேன்.

Somber
It was a somber day.
அது ஒரு (கவலை மிக்க) மோசமான நாள்.

Gloomy
I feel gloomy all the time.
நான் எப்போதும் இருண்டதாகவே உணர்கிறேன்.
(இங்கே இருந்ததாக என்பது கவலையை உணர்த்துகிறது).

Depressed
I am depressed, because I lost my job.
நான் வேலையை இழந்ததால் மிகவும் கவலையுடன் உள்ளேன்.

(இங்கே Depressed என்பது மனச்சோர்வை குறிப்பதில்லை, ஒரு குழப்பம் நிறைந்த நிலையுடன் கூடிய கவலையை குறிக்கிறது.)


Fear - பயம்

Scared
I am not scared of the dark.
நான் இருளுக்குப் பயப்படுவதில்லை.

Afraid
He is afraid of bad dreams.
அவன் கெட்ட கனவுகளுக்குப் பயப்படுகிறான்.

Frightened
They got frightened.
அவர்கள் பயந்துவிட்டார்கள்

Terrified
She was terrified.
அவள் பயமுறுத்தப்பட்டாள்.

Creeped out
He felt creeped out while walking alone at night.
இரவில் தனியாக நடந்து செல்லும் போது அவன் மிகவும் பயந்துவிட்டான்.


Anger - கோபம்

Mad
He didn't come on time and I felt mad at him.
அவன் சரியான நேரத்தில் வராததால், எனக்கு அவன் மேல் மிகுந்த கோபம் ஏற்பட்டது.

Furious
I am furious that I can't find the key.
சாவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கோபமாக இருக்கிறேன்.

Enraged
I am enraged because I could not catch my bus.
எனது பேருந்தைப் பிடிக்க முடியாமல் போனதால் கோபமாக உள்ளேன்.

Heated
He gave a very heated speech.
அவர் மிகவும் கோபத்துடன் கூடிய உரை நிகழ்த்தினார்

Pissed off
I spent a whole day to get this work done and I am really pissed off.
இந்த வேலையைச் செய்யது கொள்ள ஒரு நாள் முழுவதும் போய்விட்டது, உண்மையில் நான் மிகவும் கோபமாக உள்ளேன்.
Previous Post Next Post