ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 41


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I understand.
எனக்கு புரிகிறது.

I don't understand.
எனக்கு புரிவதில்லை.

I didn't understand.
எனக்கு புரியவில்லை.

He won't understand.
அவனுக்கு புரியாது.

What do you think?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

I don't think so.
நான் அப்படி நினைப்பதில்லை.

What do you want to do?
நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

It takes time.
அதற்கு நேரம் எடுக்கும்.

Does it take time?
அதற்கு நேரம் எடுக்குமா?

It doesn't take much time.
அதற்கு அதிக நேரம் எடுக்காது.

What is going on here?
இங்கு என்ன நடந்து காெண்டிருக்கிறது?


You can change it.
உங்களால் அதை மாற்ற முடியும்.

Can you change it?
உங்களால் அதை மாற்ற முடியுமா?

You can't change it now.
இப்போது உங்களால் அதை மாற்ற முடியாது.

Can't you change it?
உங்களால் அதை மாற்ற முடியாதா?

Don't be childish.
குழந்தைத்தனமாக இருக்க வேண்டாம்.

Don't get up.
எழுந்திருக்க வேண்டாம்.
Previous Post Next Post