ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 44 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான 22 வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


He knows.
அவனுக்குத் தெரியும்.

Does he know?
அவனுக்குத் தெரியுமா?

He doesn't know.
அவனுக்குத் தெரியாது.

Doesn't he know?
அவனுக்குத் தெரியாதா?

They invited you.
அவர்கள் உங்களை அழைத்தார்கள்.

Did they invite you?
அவர்கள் உங்களை அழைத்தார்களா?

They didn't invite you.
அவர்கள் உங்களை அழைக்கவில்லை.

Didn't they invite you?
அவர்கள் உங்களை அழைக்கவில்லையா?

Your house is far away.
உங்கள் வீடு வெகு தொலைவில் உள்ளது.

Is your house far away?
உங்கள் வீடு வெகு தொலைவில் உள்ளதா?

Your house is not very far.
உங்கள் வீடு வெகு தொலைவில் இல்லை.


Isn't your house far away?
உங்கள் வீடு வெகு தொலைவில் இல்லையா?

You have done your job.
நீங்கள் உங்கள் வேலையைச் செய்துள்ளீர்கள்.

Have you done your job?
நீங்கள் உங்கள் வேலையைச் செய்திருக்கிறீர்களா?

You didn't do your job.
நீங்கள் உங்கள் வேலையைச் செய்யவில்லை.

You have not done your job.
நீங்கள் உங்கள் வேலையைச செய்து இல்லை.

Didn't you do your job?
நீங்கள் உங்கள் வேலையை செய்யவில்லையா?

Haven't you done your job?
நீங்கள் உங்கள் வேலையை செய்து இல்லையா?

He has money.
அவனிடம் பணம் இருக்கிறது.

Does he have money?
அவனிடம் பணம் இருக்கிறதா?

He doesn't have money.
அவனிடம் பணம் இல்லை.

Doesn't he have money?
அவனிடம் பணம் இல்லையா?
Previous Post Next Post