ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 47


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

அடிப்படையில் இருந்து ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். எந்தளவுக்கு பயிச்சி செய்கிறோமோ, அந்தளவிற்கு உங்களால் பேச முடிகிறது. 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Your job is permanent.
உங்கள் தொழில் நிரந்தரமானது.
Is your job permanent?
உங்கள் தொழில் நிரந்தரமானதா?
Your job is not permanent.
உங்கள் தொழில் நிரந்தரமானதல்ல.
Isn't your job permanent?
உங்கள் தொழில் நிரந்தரமானதல்லவா?

You have money.
உங்களிடம் பணம் உள்ளது.
Do you have any money?
உங்களிடம் ஏதேனும் பணம் உள்ளதா?
You don't have money.
உங்களிடம் பணம் இல்லை.
Don't you have money?
உங்களிடம் பணம் இல்லையா?


You can ask him.
உங்களால் அவனிடம் கேட்க முடியும்.
Can you ask him?
உங்களால் அவனிடம் கேட்க முடியுமா?
You can't ask him.
உங்களால் அவனிடம் கேட்க முடியாது.
Can't you ask him?
உங்களால் அவனிடம் கேட்க முடியாதா?

The bus has arrived.
பேரூந்து வந்துள்ளது.
Has the bus arrived?
பேரூந்து வந்துள்ளதா?
The bus has not arrived yet.
பேரூந்து இன்னும் வந்து இல்லை.
Hasn't the bus arrived yet?
பேரூந்து இன்னும் வந்து இல்லையா?
Previous Post Next Post