ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 52


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இலகுவாக்கும் நோக்கில் இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பட பயன்படுத்த முடியும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் மற்றும் ஆங்கில சொற்றொடர்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


It is a beautiful place.
அது ஒரு அழகான இடம்.
Is it a beautiful place?
அது ஒரு அழகான இடமா?
It is not a beautiful place.
அது ஒரு அழகான இடம் அல்ல.
Isn't it a beautiful place?
அது ஒரு அழகான இடம் அல்லவா?

This is the safest country to live.
இது வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடு.
Is this the safest country to live?
இது வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடா?
This is not the safest country to live.
இது வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடு அல்ல.
Isn't this the safest country to live?
இது வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடு அல்லவா?

Will you be back soon?
நீங்கள் விரைவில் திரும்பி வருவீர்களா?
I will be back sooner than you think.
நீங்கள் நினைப்பதை விட விரைவாக நான் திரும்பி வருவேன்.
I will not be back sooner than you think.
நீங்கள் நினைப்பதை விட விரைவாக நான் திரும்பி வரமாட்டேன்.
Won't you be back soon?
நீங்கள் விரைவில் திரும்பி வரமாட்டீர்களா?This hotel is cheaper than other hotels.
இந்த ஹோட்டல் மற்ற ஹோட்டல்களை விட மலிவானது.
Is this hotel cheaper than others?
இந்த ஹோட்டல் மற்றவற்றை விட மலிவானதா?
This hotel is not cheaper than others.
இந்த ஹோட்டல் மற்றவற்றை விட மலிவானதல்ல.
Isn't this hotel cheaper than others?
இந்த ஹோட்டல் மற்றவற்றை விட மலிவானதல்லவா?

It is the darkest period in my life.
அது என் வாழ்வின் மிகவும் இருண்ட காலம்.
Is it the darkest period in your life?
அது உங்கள் வாழ்வின் மிகவும் இருண்ட காலமா?
It is not the darkest period in my life.
அது என் வாழ்வின் மிகவும் இருண்ட காலம் அல்ல.
Isn't it the darkest period in your life?
அது உங்கள் வாழ்வின் மிகவும் இருண்ட காலம் அல்லவா?
Previous Post Next Post