Lesson 10 | Verbs - வினைச்சொற்கள்


வினைச்சொல் (Verb) என்றால் என்ன?

ஆங்கிலத்தில் வினைச்சொல் (Verbs) என்பது ஒரு செயலை அல்லது ஒன்றின் இருப்பை அல்லது ஒன்றின் நிலையை குறிக்கும் ஒரு சொல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களின் கூட்டு எனக் கூறலாம்.

மேலே தரப்பட்ட விளக்கம் புரியவில்லை எனின், பொதுவாக ஒரு வினைச்சொல் என்பது ஒரு வாக்கியத்தில் எழுவாய் செய்யும் செயலை விவரிக்க பயன்படும் ஒரு முக்கிய பகுதி என மட்டும் இப்போதைக்கு நினைவில் வைத்திருங்கள்.

வினைச்சொற்களே ஆங்கில வாக்கியங்களின் இதயம் என அழைக்கப்படுகின்றன. காரணம், ஒரு தனி வினைச்சொல்லை மட்டும் உபயோகித்துக் கூட ஒரு செயலை விவரிக்க முடியும்.

உதாரணங்கள்:


Stop - நில்
Run - ஓடு
Go -  செல்
Play - விளையாடு
Come - வா
Drive - ஓட்டு
Give - கொடு
Meet - சந்தி
Speak - பேசு

ஆங்கில வினைச்சொற்களை இலகுவில் விளங்கிக்கொள்ளக் கூடியவாறு கீழே சில உதாரணங்கள் தரப்பட்டுளள்ன.


He plays cricket.
அவன் கிரிக்கெட் விளையாடுகிறான்.

I went to school.
நான் பாடசாலைக்குச் சென்றேன்.

He came home.
அவர் வீட்டிற்கு வந்தார்.

They studied English. 
அவர்கள் ஆங்கிலம் படித்தார்கள்.

Teacher will come today.
ஆசிரியர் இன்று வருவார்.

My book is there.
எனது புத்தகம் அங்கே உள்ளது.

They are in our house.
அவர்கள் எங்கள் வீட்டில் உள்ளார்கள்.

They were in the garden.
அவர்கள் தோட்டத்தில் இருந்தார்கள்.

She is beautiful.
அவள் அழகானவள்.

This is so hot.
இது மிகவும் சூடாக உள்ளது.

You have good habits.
உங்களிடம் நல்ல பழக்கங்கள் உள்ளன.

My friend writes a letter.
எனது நண்பன் கடிதம் ஒன்றை எழுதுகிறான்.

ஆங்கில வினைச்சொற்கள் அவற்றின் பயன்பாட்டை பொருத்து சில பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

வினைச்சொற்களின் அடிப்படை வடிவங்கள் (Basic Forms of Verbs) மற்றும் வினைச்சொற்களின் வகைகள் (Types of Verbs) பற்றி தொடர்ந்து வரும் பாடங்களில் கற்கலாம்.

இங்கே ஆங்கிலத்தை ஆரம்பத்தில் இருந்தே கற்க ஆர்வமுடைவார்கள் முதல் ஆங்கிலத்தில் ஓரளவு தேர்ச்சியுடையவர்கள் வரை இலகுவில் விளங்கிக்கொள்ளக் கூடிய அளவிற்கு விளக்கங்கள் தரப்படுகின்றன.
أحدث أقدم