ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 63


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் பேச ஆர்வம் இருந்தும் சிலர் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதற்குக் காரணம், ஆங்கிலத்தில் பேசும் போது ஏற்படக்கூடிய பிழைகளே. நீங்கள் ஆங்கிலம் தவிர்ந்த வேறு ஒரு புதிய மொழியை புதிதாக கற்று, பேச ஆரம்பிக்கும் போது இவ்வாறான தயக்கம் ஏற்படுவதில்லை. காரணம் நீங்கள் ஆங்கிலத்தை மற்ற மொழிகளுடன் ஒப்பிடும் போது மனதளவில் உயர்த்தி வைத்திருப்பதாகும். நீங்கள் ஆங்கிலத்தை ஒரு சாதாரண மொழியாக நினைத்து பேச ஆரம்பித்தால் உங்களால் ஆங்கிலத்தில் தயக்கமின்றி பேச முடியும்.

மேலும் ஆங்கிலத்தில் பேசும் போது எதாவது பிழை ஏற்பட்டால் மற்றவர்கள் உங்களை ஏளனமாக நினைக்கலாம் என்பதும் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு தயக்கம் கட்டுவதற்கான மற்றுமொரு காரணமாகும். உண்மையில் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சியுடைய எவரும் நீங்கள் பிழையாக ஆங்கிலம் பேசும் போது உங்களை ஏளனமாக நினைக்க மாட்டார்கள், நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க எடுக்கும் முயற்சியை புரிந்துகொண்டு உங்களை மேலும் உற்சாகமூட்டுவார்கள். 

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


You have to take off your shoes.
நீங்கள் உங்கள் காலணிகளை கழற்ற வேண்டி உள்ளது.

Do I have to take off my shoes?
நான் எனது காலணிகளை கழற்ற வேண்டி உள்ளதா?

You don't have to take off your shoes.
நீங்கள் உங்கள் காலணிகளை கழற்ற வேண்டியதில்லை.

Don't you have to take off your shoes?
நீங்கள் உங்கள் காலணிகளை கழற்ற வேண்டியதில்லையா?

Why do I have to take off my shoes?
ஏன் நான் எனது காலணிகளை கழற்ற வேண்டி உள்ளது?

He can understand this problem.
இந்த பிரச்சினையை அவனால் புரிந்துகொள்ள முடியும்.

Can he understand this problem?
இந்த பிரச்சினையை அவனால் புரிந்துகொள்ள முடியுமா?

He can't understand this problem.
இந்த பிரச்சினையை அவனால் புரிந்துகொள்ள முடியாது.

Can't he understand this problem?
இந்த பிரச்சினையை அவனால் புரிந்துகொள்ள முடியாதா?

Why can't he understand this problem?
ஏன் இந்த பிரச்சினையை அவனால் புரிந்துகொள்ள முடியாது?


There is something wrong.
ஏதோ ஒன்று தவறாக உள்ளது.

Is there anything wrong?
எதாவது தவறாக உள்ளதா?

There is nothing wrong.
எதுவும் தவறாக இல்லை.

Is everything OK?
அனைத்தும் சரியாக உள்ளதா?

This is my friend.
இது எனது நண்பன்.

Is this your friend?
இது உங்கள் நண்பனா?

This is not my friend.
இது எனது நண்பனல்ல.

Isn't this your friend?
இது உங்கள் நண்பனல்லவா?

Who is your friend?
யார் உங்களுடைய நண்பன்?
أحدث أقدم