ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 60


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்களுக்கு உதவும் நோக்கில் இங்கே ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த முடியும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


They will come together.
அவர்கள் ஒன்று சேர்ந்து வருவார்கள்.
Will they come together?
அவர்கள் ஒன்று சேர்ந்து வருவார்களா?
They will not come together.
அவர்கள் ஒன்று சேர்ந்து வரமாட்டார்கள்.
Won't they come together?
அவர்கள் ஒன்று சேர்ந்து வரமாட்டார்களா?

This is a good chance for us.
இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
Is this a good chance for us?
இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பா?
This is not a good chance for us.
இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பல்ல.
Isn't this a good chance for us?
இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பல்லவா?

I can recognize him.
என்னால் அவரை அடையாளம் காண முடியும்.
Can you recognize him?
உங்களால் அவரை அடையாளம் காண முடியுமா?
I can't recognize him.
என்னால் அவரை அடையாளம் காண முடியாது.
Can't you recognize him?
உங்களால் அவரை அடையாளம் காண முடியாதா?


I apologize on behalf of him.
அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
Do you apologize on behalf of him?
நீங்கள் அவர் சார்பாக மன்னிப்பு கேட்கிறீர்களா?
I can't apologize on behalf of him.
எனக்கு அவர் சார்பாக மன்னிப்பு கேட்க முடியாது.
Can't you apologize on behalf of him?
உங்களால் அவர் சார்பாக மன்னிப்பு கேட்க முடியாதா?

You can wish them.
உங்களால் அவர்களை வாழ்த்த முடியும்.
Can you wish them?
உங்களால் அவர்களை வாழ்த்த முடியுமா?
You can't wish them.
உங்களால் அவர்களை வாழ்த்த முடியாது.
Can't you wish them?
உங்களால் அவர்களை வாழ்த்த முடியாதா?

This is the right time.
இதுவே சரியான நேரம்.
Is this the right time?
இது சரியான நேரமா?
This is not the right time.
இது சரியான நேரம் அல்ல.
Isn't this the right time?
இது சரியான நேரம் அல்லவா?
Previous Post Next Post