ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 61


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் தினமும் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுக்க வேண்டும். அதற்காக இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I can imagine.
என்னால் கற்பனை செய்ய முடிகிறது.

Can you imagine?
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

I can't imagine.
என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.

Can't you imagine?
உங்களால் கற்பனை செய்ய முடியாதா?

They will overcome this challenge.
அவர்கள் இந்த சவாலை கடந்து வருவார்கள்.

Will they overcome this challenge?
அவர்கள் இந்த சவாலை கடந்து வருவார்களா?

They will not overcome this challenge.
அவர்கள் இந்த சவாலை கடந்து வர மாட்டார்கள்.

Won't they overcome this challenge?
அவர்கள் இந்த சவாலை கடந்து வர மாட்டார்களா?

Be hopeful.
நம்பிக்கையுடன் இருங்கள்.

Don't keep much hope.
அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்.

Be patient.
பொறுமையாய் இரு.

Don't lose patience.
பொறுமையை இழக்காதீர்கள்.


During this time.
இந்த நேரத்தில்.

For the first time.
முதல் முறையாக.

At that time.
அந்த நேரத்தில்.

He has a good job.
அவருக்கு ஒரு நல்ல வேலை இருக்கிறது.

Does he have a good job?
அவருக்கு ஒரு நல்ல வேலை இருக்கிறதா?

He doesn't have a proper job.
அவருக்கு சரியான ஒரு வேலை இல்லை.

Doesn't he have a proper job?
அவருக்கு சரியான ஒரு வேலை இல்லையா?

I realized that.
நான் அதை உணர்ந்தேன்.

Did you realize that?
நீங்கள் அதை உணர்ந்தீர்களா?

I didn't realize that.
நான் அதை உணரவில்லை.

Didn't you realize that?
நீங்கள் அதை உணரவில்லையா?

He missed the opportunity.
அவர் வாய்ப்பை இழந்தார்.

Did he miss the opportunity?
அவர் வாய்ப்பை இழந்தாரா?

He didn't miss the opportunity.
அவர் வாய்ப்பை இழக்கவில்லை.

Didn't he miss the opportunity?
அவர் வாய்ப்பை இழக்கவில்லையா?
Previous Post Next Post