ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிச்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்யும் அளவுக்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது. ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


One week ago.
ஒரு வாரத்திற்கு முன்பு.

Few weeks ago.
சில வாரங்களுக்கு முன்பு.

After three weeks.
மூன்று வாரங்களுக்குப் பிறகு.

Two months ago.
இரண்டு மாதங்களுக்கு முன்பு.

Few months ago.
சில மாதங்களுக்கு முன்பு.

After six months.
ஆறு மாதங்களுக்குப் பிறகு.

One year ago.
ஒரு வருடத்துக்கு முன்பு.

Few years ago.
சில வருடங்களுக்கு முன்பு.

After five years.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு.

I learned many things.
நான் பல விடயங்களைக் கற்றுக்கொண்டேன்.

Did you learn anything?
நீங்கள் ஏதாவது கற்றுக்கொண்டீர்களா?


I didn't learn anything.
நான் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை.

Didn't you learn anything?
நீங்கள் எதுவும் கற்றுக்கொள்ளவில்லையா?

It is my responsibility.
அது எனது பொறுப்பு.

Is it your responsibility?
அது உங்கள் பொறுப்பா?

It is not my responsibility.
அது எனது பொறுப்பல்ல.

Isn't it your responsibility?
அது உங்கள் பொறுப்பல்லவா?

We have few enemies.
எங்களுக்கு கொஞ்சம் எதிரிகள் உள்ளனர்.

Do we have enemies?
எங்களுக்கு எதிரிகள் உள்ளார்களா?

We don't have enemies.
எங்களுக்கு எதிரிகள் இல்லை.

Don't we have enemies?
எங்களுக்கு எதிரிகள் இல்லையா?


He has no choice.
அவனுக்கு வேறு வழியில்லை.

They have no choice.
அவர்களுக்கு வேறு வழியில்லை.

She has no choice.
அவளுக்கு வேறு வழியில்லை.

We have no choice.
எங்களுக்கு வேறு வழியில்லை.

He will take care of them.
அவன் அவர்களை கவனித்துக்கொள்வான்.

Will he take care of them?
அவன் அவர்களை கவனித்துக்கொள்வானா?

He will not take care of them.
அவன் அவர்களை கவனித்துக்கொள்ள மாட்டான்.

Won't he take care of them?
அவன் அவர்களை கவனித்துக்கொள்ள மாட்டானா?
Previous Post Next Post