அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 22 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் இங்கே தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஒரு மொழியை கற்பதற்கும், பேசுவதற்கும் அம்மொழியில் உள்ள சொற்களை தெரிந்துவைத்திருப்பதன் முக்கியத்துவம் பற்றி முன்னைய பகுதிகளில் பார்த்தோம்.

இங்கே அன்றாட வாழ்வில் பயன்படும் சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.


Focus - கவனம் செலுத்துதல்
I focused on my education
நான் எனது கல்வியில் கவனம் செலுத்தினேன்.

Consider - கருத்தில் கொள்ளுங்கள்
Please consider my request.
தயவுசெய்து எனது வேண்டுகோளை கருத்தில் கொள்ளுங்கள்.

Remarkable - குறிப்பிடத்தக்க
He made a remarkable contribution.
அவன் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு செய்தான்.

Discourage - அதைரியப்படுத்து / ஊக்கம் இழக்கச் செய்.
Don't discourage them.
அவர்களை அதைரியப்படுத்த வேண்டாம்.

Privilege - சலுகை / சிறப்புரிமை. 
We don't have any privileges.
எங்களுக்கு எந்த சிறப்புரிமையும் இல்லை.

Regret - வருத்தம்
We regret for the inconvenience caused.
ஏற்பட்ட அசெளகரியத்துக்கு நாம் வருந்துகிறோம்.

Aware - அறிந்த
I was not aware of that.
நான் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை.

Awareness - விழிப்புணர்வு
Health awareness program
சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி


Awful - மோசமான
Awful effects
மோசமான விளைவுகள்

Appalling - திகைக்க வைக்கும் / திகிலூட்டும்.
Appalling news
திகிலூட்டும் செய்தி

Condemn - கண்டனம்
We strongly condemn this attack.
நாம் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Democracy - ஜனநாயகம்
This is a democratic country.
இது ஒரு ஜனநாயக நாடு.

Cheat - ஏமாற்று
Don't cheat us.
எங்களை ஏமாற்ற வேண்டாம்.

Seek - தேடு
Seek help.
உதவி தேடுங்கள்.

Impact - தாக்கம்
Impact on our economy.
எமது பொருளாதாரத்தின் மீதான தாக்கம்.

Shock - அதிர்ச்சி
It was a shocking incident.
அது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம்.

Assume - கருதுங்கள்
I assume that you are not there.
நீங்கள் அங்கே இல்லை என்று நான் கருதுகிறேன்.

Intervention - தலையீடு
Human interventions
மனித தலையீடுகள்.

Priority - முன்னுரிமை
I give priority to my parents.
நான் எனது பெற்றோருக்கு முன்னுரிமை வழங்குகிறேன்.
Previous Post Next Post