ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 79


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். இது ஆங்கிலத்தில் பேசுவோம் எனும் தொடரின் 79 ஆவது பகுதியாகும்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் மற்றும் சொற்றொடர்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Long-term
நீண்ட கால

Short-term
குறுகிய கால

Well known
நன்கு அறியப்பட்ட

Climate change.
காலநிலை மாற்றம்.

Human nature.
மனித இயல்பு

She introduced him to me.
அவள் அவனை எனக்கு அறிமுகப்படுத்தினாள்.

Did she introduce him to you?
அவள் அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்தினாளா?

She didn't introduce him to me.
அவள் அவனை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை.

Didn't she introduce him to you?
அவள் அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையா?

They have to say something.
அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டி உள்ளது.

Do they have to say something?
அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டி உள்ளதா?

They don't have to say anything.
அவர்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

Don't they have to say anything?
அவர்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லையா?


You will be safe here.
நீங்கள் இங்கே பாதுகாப்பாக இருப்பீர்கள்.

Will I be safe here?
நான் இங்கே பாதுகாப்பாக இருப்பேனா?

You will not be safe here.
நீங்கள் இங்கே பாதுகாப்பாக இருக்க மாட்டீர்கள்.

Won't I be safe here?
நான் இங்கே பாதுகாப்பாக இருக்க மாட்டேனா?

This is a good example.
இது ஒரு நல்ல உதாரணம்.

Is this a good example?
இது ஒரு நல்ல உதாரணமா?

This is not a good example.
இது ஒரு நல்ல உதாரணம் அல்ல.

Isn't this a good example?
இது ஒரு நல்ல உதாரணம் அல்லவா?

He is an innocent.
அவன் ஒரு அப்பாவி.

Is he an innocent?
அவன் ஒரு அப்பாவியா?

He is not an innocent.
அவன் ஒரு அப்பாவியல்ல.

Isn't he an innocent?
அவன் ஒரு அப்பாவியல்லவா?
Previous Post Next Post