ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 80


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். இது ஆங்கிலத்தில் பேசுவோம் எனும் தொடரின் 80 ஆவது பகுதியாகும்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் முடிந்தவரையில் ஆங்கிலத்தில் கதைக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் இங்கே தரப்படும் இந்த ஆங்கில வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


They have given us money.
அவர்கள் எங்களுக்கு பணம் தந்திதிருக்கிறார்கள்.

Have they given you money?
அவர்கள் எங்களுக்கு பணம் தந்திதிருக்கிறார்களா?

They have not given us money.
அவர்கள் எங்களுக்கு பணம் தந்தில்லை.

Haven't they given us money?
அவர்கள் எங்களுக்கு பணம் தந்தில்லையா?

Wait until I come.
நான் வரும் வரை காத்திருங்கள்.

Don't wait until I come.
நான் வரும் வரை காத்திருக்க வேண்டாம்.

Can you wait until I come?
நான் வரும் வரை உங்களால் காத்திருக்க முடியுமா?

I can wait until you come.
நீங்கள் வரும் வரை என்னால் காத்திருக்க முடியும்.

I can't wait until you come.
நீங்கள் வரும் வரை என்னால் காத்திருக்க முடியாது.

Can't you wait until I come?
நான் வரும் வரை உங்களால் காத்திருக்க முடியாதா?

Why can't you wait until I come?
ஏன் நான் வரும் வரை உங்களால் காத்திருக்க முடியாது?

You have helped me a lot.
நீங்கள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறீர்கள்.

Have I helped you a lot?
நான் உங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறேனா?

You have not helped me a lot.
நீங்கள் எனக்கு நிறைய உதவி செய்து இல்லை.

Haven't I helped you a lot?
நான் உங்களுக்கு நிறைய உதவி செய்து இல்லையா?


He walks without any fear.
அவன் எந்த பயமும் இல்லாமல் நடக்கிறான்.

Does he walk without any fear?
அவன் எந்த பயமும் இல்லாமல் நடக்கிறானா?

Is it possible to live without failures?
தோல்விகள் இல்லாமல் வாழ்வது சாத்தியமா?

It is impossible to live without failures.
தோல்விகள் இல்லாமல் வாழ்வது சாத்தியமற்றது.

Isn't it possible to live without failures?
தோல்விகள் இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லையா?

You will meet many people.
நீங்கள் பல மக்களை சந்திப்பீர்கள்.

Will I meet many people?
நான் பல மக்களை சந்திப்பேனா?

You will not meet many people.
நீங்கள் பல மக்களை சந்திக்க மாட்டீர்கள்.

Won't I meet many people?
நான் பல மக்களை சந்திக்க மாட்டேனா?
Previous Post Next Post