ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 73


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

அநேகமானவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதில் சிரமம் இருக்கலாம். அதேபோல் பலருக்கும் ஆங்கிலத்தில் மற்றவர்கள் பேசும்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று விளங்கிக்கொள்வது சிரமமாக இருக்கும். பொதுவாக ஆங்கில திரைப்படங்களில் என்ன பேசுகிறார்கள் என்று சிலருக்கு அறவே புரியாது. இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் ஆங்கிலத்தை உச்சரிக்கும் விதமே. நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் ஆங்கில உச்சரிப்பு வித்தியாசப்படும்.

ஆகவே 'ஆங்கிலத்தில் பேசுவோம்' பகுதியின் ஓர் புதிய அங்கமாக உலக பிரபலங்களின் ஆங்கில உரைகளில் உள்ள ஆங்கில வாக்கியங்களை தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்க உள்ளோம். அவற்றை எமது YouTube சேனலிலும் காணொளிகளாக தருகிறோம். 

இங்கே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் 2020 தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் உள்ள சில ஆங்கில சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களின் தமிழ் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. 


இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


This week 
இந்த வாரம்

Joyful festival.
மகிழ்ச்சிகரமான பண்டிகை.

Important contributions.
முக்கிய பங்களிப்புகள்.

On behalf of our family
எங்கள் குடும்பத்தின் சார்பாக

The start of the New Year.
புத்தாண்டின் தொடக்கம்.

Around the world
உலகம் முழுவதும்

Will come together 
ஒன்று சேர்வார்கள்.

To celebrate
கொண்டாடுவதற்கு


It is a chance.
இது ஒரு சந்தர்ப்பம்.

To share
பகிர்ந்து கொள்ள

Heritage month.
பாரம்பரிய மாதம்.

To recognize
அடையாளம் கண்டுகொள்ள

Strong roots.
வலுவான வேர்கள்.

It is an opportunity
இது ஒரு வாய்ப்பு

To gather with friends and family
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்று சேர.

I wish everyone.
நான் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
Previous Post Next Post