ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 74


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


We decided to go.
நாங்கள் போக முடிவு செய்தோம்.

Did you decide to go?
நீங்கள் போக முடிவு செய்தீர்களா?

We didn't decide to go.
நாங்கள் போக முடிவு செய்யவில்லை.

Didn't you decide to go?
நீங்கள் போக முடிவு செய்யவில்லையா?

Ask yourself.
உங்களையே கேட்டுகொள்ளுங்கள்.

Ask them.
அவர்களிடம் கேளுங்கள்.

Ask him.
அவனிடம் கேளுங்கள்.

Ask her.
அவளிடம் கேளுங்கள்.

Ask someone.
யாரிடமாவது கேளுங்கள்.

It was very hard to accept that.
அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது.

Was it very hard to accept that?
அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்ததா?

It was not very hard to accept that.
அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கவில்லை.

Wasn't it very hard to accept that?
அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கவில்லையா?


You will face many problems.
நீங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.

Will I face many problems?
நான் பல பிரச்சினைகளை எதிர்கொள்வேனா?

You won't face any problem.
நீங்கள் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.

Won't you face any problem?
நீங்கள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள மாட்டீர்களா?

He often comes here.
அவர் அடிக்கடி இங்கு வருவார்.

Does he often come here?
அவர் அடிக்கடி இங்கு வருவாரா?

Throughout my life.
என் வாழ்நாள் முழுவதும்.

Throughout her life.
அவளது வாழ்நாள் முழுவதும்.

Throughout his life.
அவனது வாழ்நாள் முழுவதும்.

Throughout their lives.
அவர்களுடைய வாழ்நாள் முழுவதும்.
Previous Post Next Post