ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். இது ஆங்கிலத்தில் பேசுவோம் எனும் தொடரின் 78 ஆவது பகுதியாகும்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிச்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்யும் அளவுக்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது. ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I had some issues.
எனக்கு சில சிக்கல்கள் இருந்தன.

Did you have any issues?
உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தனவா?

I didn't have any issues.
எனக்கு எந்த சிக்கல்களும் இருக்கவில்லை.

Didn't you have any issues?
உங்களுக்கு எந்த சிக்கல்களும் இருக்கவில்லையா?

One more
இன்னும் ஒன்று

Once more
இன்னொரு முறை

For now
இப்போதைக்கு

Forever
என்றென்றும்

At least
குறைந்தபட்சம்

At last
கடைசியில்

Think about it.
அதைப் பற்றி சிந்தியுங்கள்.

Don't think about it.
அதைப் பற்றி சிந்திக்க வேண்டாம்.

Why don't you think about that?
ஏன் நீங்கள் அதைப் பற்றி சிந்திப்பதில்லை?


They will have changed it.
அவர்கள் அதை மாற்றியிருப்பார்கள்.

Will they have changed it?
அவர்கள் அதை மாற்றியிருப்பார்களா?

They won't have changed it.
அவர்கள் அதை மாற்றியிருக்க மாட்டார்கள்.

Won't they have changed it?
அவர்கள் அதை மாற்றியிருக்க மாட்டார்களா?

This happens every day.
இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது.

Does this happen every day?
இது ஒவ்வொரு நாளும் நடக்கிறதா?

This doesn't happen every day.
இது ஒவ்வொரு நாளும் நடப்பதில்லை.

Doesn't this happen every day?
இது ஒவ்வொரு நாளும் நடப்பதில்லையா?

I have some suggestions.
என்னிடம் சில ஆலோசனைகள் உள்ளன.

Do you any suggestions?
உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் உள்ளனவா?

I don't have any suggestions.
என்னிடம் எந்த ஆலோசனைகளும் இல்லை.

Don't you have any suggestions?
உங்களிடம் எந்த ஆலோசனைகளும் இல்லையா?
Previous Post Next Post