ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 81


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக இங்கே தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும். 


Let's start now.
இப்போது தொடங்குவோம்.

We should start now.
நாம் இப்போது தொடங்க வேண்டும்.

We should not start now.
நாம் இப்போது தொடங்கக்கூடாது.

Don't start now.
இப்போது தொடங்க வேண்டாம்.

You can start later.
நீங்கள் பிறகு தொடங்க முடியும்.

Shall we start later?
நாங்கள் பிறகு தொடங்குவோமா?

This is my favourite book.
இது எனக்கு பிடித்த புத்தகம்.

Is this your favourite book?
இது உங்களுக்கு பிடித்த புத்தகமா?

This is not my favourite book.
இது எனக்கு பிடித்த புத்தகமல்ல.

Isn't this your favourite book?
இது உங்களுக்கு பிடித்த புத்தகமல்லவா?

Stay away from us.
எங்களிடமிருந்து விலகி இருங்கள்.

Don't stay away from us.
எங்களிடமிருந்து விலகி இருக்க வேண்டாம்.

Do you want to stay away from us?
உங்களுக்கு எங்களிடமிருந்து விலகி இருக்க வேண்டுமா?

Why don't you stay away from them?
ஏன் நீங்கள் அவர்களிடமிருந்து விலகி இருப்பதில்லை?


I got this idea.
எனக்கு இந்த யோசனை வந்தது.

I didn't get this idea.
எனக்கு இந்த யோசனை வரவில்லை.

She sat on the floor.
அவள் தரையில் அமர்ந்தாள்.

Did she sit on the floor?
அவள் தரையில் அமர்ந்தாளா?

She didn't sit on the floor.
அவள் தரையில் அமரவில்லை.

Didn't she sit on the floor?
அவள் தரையில் அமரவில்லையா?

He was attracted by your speech.
அவன் உங்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டான்.

Was he attracted by my speech?
அவன் எனது பேச்சால் ஈர்க்கப்பட்டானா?

He was not attracted by your speech.
அவன் உங்கள் பேச்சால் ஈர்க்கப்படவில்லை.

Wasn't he attracted by my speech?
அவன் எனது பேச்சால் ஈர்க்கப்படவில்லையா?
Previous Post Next Post