ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 82


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் முக்கிய வாக்கியங்களையும், சொற்றொடர்களையும், சொற்களையும் தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இயன்றவரையில் ஆங்கிலத்தில் கதைக்க பயிச்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்யும் அளவுக்கு காலப்போக்கில் உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது. ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


She went somewhere.
அவள் எங்கோ சென்றாள்.
Did she go anywhere?
அவள் எங்காவது சென்றாளா?
She didn't go anywhere.
அவள் எங்கும் செல்லவில்லை.
Didn't she go anywhere?
அவள் எங்கும் செல்லவில்லையா?

So many of us.
நம்மில் பலர்
So many of you
உங்களில் பலர்
So many of them
அவர்களில் பலர்
Some of us
நம்மில் சிலர்
Some of you
உங்களில் சிலர்
Some of them
அவர்களில் சிலர்

Why are you here?
நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்?
What were you doing there?
நீங்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
I saw it everywhere.
நான் அதை எல்லா இடத்திலும் கண்டேன்.


She grew up there.
அவள் அங்கே வளர்ந்தாள்.
Did she grow up there?
அவள் அங்கே வளர்ந்தாளா?
She didn't grow up there.
அவள் அங்கே வளரவில்லை
Didn't she grow up there?
அவள் அங்கே வளரவில்லையா?

You must go.
நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டும்.
Must you go?
நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டுமா?
You must not go.
நீங்கள் கட்டாயம் செல்லக் கூடாது.
Mustn't you go?
நீங்கள் கட்டாயம் செல்லக் கூடாதா?

Don't talk about that.
அதைப் பற்றி பேச வேண்டாம்.
Please talk about that.
தயவுசெய்து அதைப் பற்றி பேசுங்கள்.
Can you talk about that?
உங்களால் அதைப் பற்றி பேச முடியுமா?
I can't talk about that.
என்னால் அதைப் பற்றி பேச முடியாது.
Previous Post Next Post