ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 83


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


We work for unity.
நாங்கள் ஒற்றுமைக்காக உழைக்கிறோம்.

Do you work for unity?
நீங்கள் ஒற்றுமைக்காக உழைக்கிறீர்களா?

You don't work for unity.
நீங்கள் ஒற்றுமைக்காக உழைப்பதில்லை.

Don't we work for unity?
நாங்கள் ஒற்றுமைக்காக உழைப்பதில்லையா?

You forced him to do this.
இதைச் செய்ய நீங்கள் அவரை கட்டாயப்படுத்தினீர்கள்.

Did you force him to do this?
இதைச் செய்ய நீங்கள் அவரை கட்டாயப்படுத்தினீர்களா?

I didn't force him to do this.
இதைச் செய்ய நான் அவரை கட்டாயப்படுத்தவில்லை.

Didn't you force him to do this?
இதைச் செய்ய நீங்கள் அவரை கட்டாயப்படுத்தவில்லையா?

They survived.
அவர்கள் உயிர் பிழைத்தார்கள்.

Did they survive?
அவர்கள் உயிர் பிழைத்தார்களா?

They didn't survive.
அவர்கள் உயிர் பிழைக்கவில்லை.

Didn't they survive?
அவர்கள் உயிர் பிழைக்கவில்லையா?Earth needs us.
பூமிக்கு நாம் தேவை.

We need earth.
எமக்கு பூமி தேவை.

Does earth need us?
பூமிக்கு நாம் தேவையா?

Earth doesn't need us.
பூமிக்கு நாம் தேவையில்லை.

Do we need earth?
எமக்கு பூமி தேவையா?

Don't we need earth?
எமக்கு பூமி தேவையில்லையா?

They don't need earth.
அவர்களுக்கு பூமி தேவையில்லை.

You can go against them.
உங்களால் அவர்களுக்கு எதிராக செல்ல முடியும்.

Can you go against them?
உங்களால் அவர்களுக்கு எதிராக செல்ல முடியுமா?

You can't go against them.
உங்களால் அவர்களுக்கு எதிராக செல்ல முடியாது.

Can't you go against them?
உங்களால் அவர்களுக்கு எதிராக செல்ல முடியாதா?

We have to protect them.
நாங்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

Do we have to protect them?
நாங்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளதா?

We don't have to protect them.
நாங்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டியதில்லை.

Don't we have to protect them?
நாங்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டியதில்லையா?
Previous Post Next Post