ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 91


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Self-confidence
தன்னம்பிக்கை

Self-control
சுய கட்டுப்பாடு

Self-defence
தற்பாதுகாப்பு

Self-respect
சுய மரியாதை

Self-service
சுய சேவை

Self-assessment
சுய மதிப்பீடு

Self-employment
சுய வேலைவாய்ப்பு

Self-improvement
சுய முன்னேற்றம்

She was prepared for that.
அவள் அதற்குத் தயாராக இருந்தாள்.

Was she prepared for that?
அவள் அதற்குத் தயாராக இருந்தாளா?

She was not prepared for that.
அவள் அதற்குத் தயாராக இருக்கவில்லை.

Wasn't she prepared for that?
அவள் அதற்குத் தயாராக இருக்கவில்லையா?

It is a lie.
அது ஒரு பொய்.

Is it a lie?
அது ஒரு பொய்யா?

It is not a lie.
அது ஒரு பொய்யல்ல.

Isn't it a lie?
அது ஒரு பொய்யல்லவா?


Spread this message.
இந்த செய்தியை பரப்புங்கள்.

Don't spread this message.
இந்த செய்தியை பரப்ப வேண்டாம்.

Can you spread this message?
உங்களால் இந்த செய்தியை பரப்ப முடியுமா?

We can't spread this message?
எங்களால் இந்த செய்தியை பரப்ப முடியாது?

Fight for that.
அதற்காக போராடுங்கள்.

Don't you fight for that?
நீங்கள் அதற்காக போராடுவதில்லையா?

Why don't you fight for that?
ஏன் நீங்கள் அதற்காக போராடுவதில்லை?

We can't fight against them.
எங்களால் அவர்களுக்கு எதிராக போராட முடியாது.

He had gone there.
அவன் அங்கு சென்றிருந்தான்.

Had he gone there?
அவன் அங்கு சென்றிருந்தானா?

He had not gone there.
அவன் அங்கு சென்றிருக்கவில்லை.

Hadn't he gone there?
அவன் அங்கு சென்றிருக்கவில்லையா?
Previous Post Next Post