ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 84


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


She became angry.
அவள் கோபமடைந்தாள்.

Did she become angry?
அவள் கோபமடைந்தாளா?

She didn't become angry.
அவள் கோபப்படவில்லை.

Didn't she become angry?
அவள் கோபப்படவில்லையா?

They have experienced this before.
இதை அவர்கள் இதற்கு முன்பு அனுபவித்திருக்கிறார்கள்.

Have they experienced this before?
இதை அவர்கள் இதற்கு முன்பு அனுபவித்திருக்கிறார்களா?

They have not experienced this before.
இதை அவர்கள் இதற்கு முன்பு அனுபவித்திருக்கவில்லை.

Haven't they experienced this before?
இதை அவர்கள் இதற்கு முன்பு அனுபவித்திருக்கவில்லையா?

I wonder.
நான் ஆச்சரியப்படுகிறேன்.

Do you wonder?
நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?

I don't wonder.
நான் ஆச்சரியப்படுவதில்லை.

Don't you wonder?
நீங்கள் ஆச்சரியப்படுவதில்லையா?


You can go back to work.
நீங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியும்.

Can you go back to work?
நீங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியுமா?

You can't go back to work.
நீங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாது.

Can't you go back to work?
நீங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாதா?

I took a decision.
நான் ஒரு முடிவை எடுத்தேன்.

Did you take any decision?
நீங்கள் ஏதாவது முடிவு எடுத்தீர்களா?

I didn't take any decision.
நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.

Didn't you take any decision?
நீங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லையா?

He ignores me.
அவன் என்னை புறக்கணிக்கிறான்.

Does he ignore you?
அவன் உங்களை புறக்கணிக்கிறானா?

He doesn't ignore me.
அவன் என்னை புறக்கணிப்பதில்லை.

Doesn't he ignore you?
அவன் உங்களை புறக்கணிப்பதில்லையா?
Previous Post Next Post